×

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

சென்னை: சிவகாசி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  அதிமுக  முன்னாள் அமைப்பு செயலாளரும், விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும், சிவகாசி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரிடம் பாலகிருஷ்ணன் மிகுந்த விசுவாசம் வைத்திருந்தார்.

அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளதோடு இரண்டு முறை சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, இந்த துயரத்தை தாங்கி கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.   இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : Deputy Chief Minister ,MLA ,AIADMK , AIADMK MLA,passes away, Chief Minister, Deputy Chief Minister condoles
× RELATED ரூ.14 ஆயிரம் கோடிக்கு துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்