×

தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்து பேச்சு அசுத்தமே வெளியேறு: மோடி முழக்கம்

புதுடெல்லி: ‘‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், ‘அசுத்தமே வெளியேறு,’ என முழக்கமிடுவோம்,’’ என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். நாட்டின் பிரதமராக முதல் முறை மோடி பதவியேற்ற பிறகு, ‘தூய்மை இந்தியா’ என்ற கனவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். . இந்நிலையில், ‘தூய்மை இந்தியா இயக்கம்’ குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையில் , டெல்லியில் ‘ராஷ்டிரிய ஸ்வச்சதா கேந்திரா’ எனப்படும் ‘தேசிய  தூய்மை மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதை மோடி நேற்று திறந்து வைத்தார். பின்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இவ்விழாவில் பங்கேற்ற  மாணவர்களுடன்  அவர் கலந்துரையாடினர். அப்போது மோடி பேசுகையில், ‘‘, கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, சமூக விலகல் விதிமுறைகளைப்  பின்பற்றி முகமூடிகளை அணிந்து இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் அனைவரும்  இப்போது காந்தஜி, பாரத் சோர்ஹோ என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக  இருக்கிறோம்.கடந்தாண்டு காந்திஜியின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மகாத்மா காந்தியின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முழு  உலகமும் முன்வருகிறது. இன்று, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், ‘அசுத்தமே வெளியேறு,’ என முழக்கமிடுவோம்,’’ என்று கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளில், காந்தியால் ஈர்க்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள  லட்சக்கணக்கான மக்கள், தூய்மை இந்தியா இயக்கத்தை வாழ்க்கையின் ஒரு அங்கமாக  மாற்றி உள்ளனர். கடந்த 60 மாதங்களுக்கும் மேலாக 60 கோடி மக்களுக்கு கழிப்பறை  வசதியை அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்,’’ என்றும் வலியுறுத்தினார். மேலும், ‘அசுத்தமே வெளியேறு’ இயக்கம் பற்றி நேற்று முதல் ஒரு வாரத்துக்கு பிரசாரம் செய்யப் போவதாக ஏற்கனவே மோடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Modi ,National Hygiene Center , Start , National Hygiene Center, leave ,talk dirty: Modi's slogan
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...