×

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி அண்ணாவின் கொள்ளுப்பேத்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி பிரித்திகா ராணி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்து தேர்வு எழுதிய அவர், அகில இந்திய அளவில் 171வது இடத்தை பிடித்தார். இதுதொடர்பான செய்தி தினகரனில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை:திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய குடிமையியல் தேர்வில் (யுபிஎஸ்சி) வெற்றி பெற்றுள்ள பேரறிஞர் அண்ணாவின்  கொள்ளுப் பேத்தியான ராணியை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அதோடு, பேரறிஞர் அண்ணாவை போல் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் ராணி மென்மேலும் பல உயரங்களை அடைந்திட வேண்டும் என வாழ்த்து மடல் ஒன்றினையும் அவருக்கு எழுதியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Anna ,MK Stalin ,victory ,son-in-law ,Civil Service Examination , MK Stalin's,congratulations, Anna's son-in-law,won the civil service, examination
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்