×

டெண்டர் திறக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்குவதில் தாமதம்

* பொறுப்பை தட்டிக்கழிக்கும் உயர் அதிகாரி
* பொதுப்பணித்துறையில் சர்ச்சை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2வது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பருவமழையையொட்டி அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாற்று படுகைகள் மற்றும் கால்வாய்களில் முன்னெச்சரிக்கை பணிகளை செய்ய ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் பணிகளை தொடங்கும் வகையில், பொதுப்பணித்துறை சார்பில் ஜூலை 31ம் தேதிக்குள் டெண்டர் திறக்கப்படும் என்று குறுகிய கால டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கண்காணிப்பு பொறியாளர், துணை தலைமை பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், டெண்டர் நடக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் கண்காணிப்பு பொறியாளர் பொறுப்பு பூண்டி நீராய்வு நிறுவனம் இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை 31ம் தேதி சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள பாலாறு வட்ட வடிநில கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், இப்பணிகளை டெண்டர் எடுக்க கான்ட்ராக்டர்கள் பலர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் ஒப்பந்தபடிவம் பெற்ற அன்று மாலையே ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டன. ஆனால், தற்போது வரை ஒப்பந்தம் திறக்கவில்லை. இது குறித்து கான்ட்ராக்டர்கள் கேட்டால் கொரோனா தொற்றுக்கு விடுமுறைக்கு சென்ற அதிகாரிகள் வந்தால் தான் ஒப்பந்தப்புள்ளி திறக்க முடியும் என்று கூறி விட்டனர்.இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கியிருக்க வேண்டும். அப்போது தான் பருவழை காலத்தில் கால்வாய்களில் தண்ணீர் சீரான இடைவெளியில் செல்ல முடியும். இதற்காக, தான் முதல்வர் எடப்பாடி இப்பணிக்கு முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டார். ஆனால், டெண்டர் விட்டு 10 நாட்களாகியும் ஒப்பந்த திறக்கப்படாததால் வடகிழக்கு முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : Chennai , Delay , monsoon precautionary, Chennai as tenders ,without opening
× RELATED பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து