×

2 ஆண்டுகளான நிலையில் பழைய பத்திரங்களை கணினியில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல்

* பட்டா மாறுதலில் மோசடி நடக்க வாய்ப்பு
* பொதுமக்கள் அச்சம்

சென்னை: தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் செய்யப்படுகிறது. இந்த அலுவலகங்களில் பத்திரப்பதிவு கடந்த 2001 முதல் கணினி மயமாக்கப்பட்டன. இதன் மூலம் இணையதளம் மூலம் பத்திரப்பதிவுக்கு கட்டணம் செலுத்தி கொள்ள முடியும். அதே போன்று வில்லங்க சான்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் கிடைக்கும் நிலை இருந்தது. இருப்பினும் கடந்த 1975க்கு முன்னர் பதிவு செய்ய பத்திரங்களின் ஆவணங்களை வில்லங்சான்று பெற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இந்த பத்திரப பதிவு ஆவணங்கள் தொலைந்தால் கூட சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பித்து பெறும் நிலை தான் இருந்தது.
இதை தொடர்ந்து கடந்த 1865 முதல் 2009க்கு முன்னர் உள்ள பத்திரங்களின் நகல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பதிவுத்துறை முடிவு செய்தது. இதற்காக, ₹90 கோடி செலவில் ஒப்பந்த நிறுவனம் ேதர்வு செய்யப்பட்டு, அந்த நிறுவனம் மூலம் கடந்த 2018 முதல் இப்பணிகள் நடந்து வருகிறது.

சார்பதிவாளர் அலுவலகங்களில் பழைய பத்திரங்கள் தொகுதியாக வைக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு தொகுப்பிலும் 500 முதல் 5 ஆயிரம் பக்கங்கள் உள்ளன. இந்த பத்திரங்களின் நகல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பணிகளை தொடங்கிய 2 ஆண்டுகளான நிலையில் 60 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இப்பணிகளை முடிக்க குறைந்தது 3 மாதங்களுக்கு மேல் ஆக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் பத்திரப்பதிவுத்துறை சார்பில் உட்பிரிவுகள் இல்லாத சொத்துக்களை பதிவு செய்தால் தானாக பட்டா மாறும் திட்டம் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் இன்னும் கணினி மயமாக்கப்படாத நிலையில், ஒரு வேளை போலியான ஆவணங்களை காட்டி பத்திரப்பதிவு செய்யப்படும் பட்சத்தில், சார்பதிவாளர்கள் அதை ஆராய்ந்து, பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்த நிலையில், பத்திரப்பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறும் பட்சத்தில் போலி பத்திரப்பதிவுக்கு அங்கீகாரம் கொடுத்தது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தி விடும்.
இந்த சூழலில் பழைய ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை முடித்த பிறகு இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் வருங்காலங்களில் இந்த திட்டத்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Tags : Problem uploading ,old documents, system ,2 years
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...