×

ரஷ்யா, ஆக்ஸ்போர்டு போட்டி தடுப்பு மருந்தை முதலில் வெளியிட போவது யார்? : ரூ.225க்கு விற்க பில்கேட்ஸ் திட்டம்

புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை, ரூ.225 விற்க பில்கேட்ஸ் முடிவு செய்துள்ளார். கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பில் பல நாடுகள் மும்முரமாக உள்ளன. இதில், முதலில் முந்திக் கொள்வதற்காக ரஷ்யா முயற்சி செய்து வருகிறது. இது கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தை அடுத்த வாரத்தில் பயன்பாட்டுக்கு விடப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால், எந்தவொரு மருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டாலும் அதற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வளவு குறுகிய காலத்தில், மனிதர்களிடம் முழுமையாக பரிசோதனை நடத்தாமல் இந்த மருந்தை ரஷ்யா வெளியிடுவது ஆபத்தானது என மருந்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவிலும் இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஐதராபாத்தை சேர்ந்தி பயோடெக் நிறுவனமும் இணைந்து., ‘கோவாக்சின்’ என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. இவையும் மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிப்பது நடந்து கொண்டிருக்கிறது. மொத்தமாக 3 கட்டங்களாக இவை மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட வேண்டும். அதில், கோவாக்சின் 2வது கட்டத்தை எட்டியிருக்கிறது.

அதேபோல், இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம், புனேவிலுள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா, ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தி வருகிறது.  ஆக்ஸ்போர்டு பல்கலை. கண்டுபிடித்துள்ள தடுப்பூசியின் பெயர் ‘கோவிஷீல்ட்.’ இதைதான், அந்த பல்கலை.யுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மனிதர்களிடம் செலுத்தில சீரம் பரிசோதனை செய்து வருகிறது. இந்த சோதனைகள் முடிந்த பிறகு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்தவுடன் சந்தைப்படுத்துவதற்காக பில்கேட்சின் அறக்கட்டளையுடன் சீரம் இன்ஸ்டிட்யூட் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த தடுப்பூசியை 92 நாடுகளில் உடனடியாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு தடுப்பூசியை ரூ.225க்கு வழங்க பில்கேட்ஸ் திட்டமிட்டு இருப்பதாக சீரம் கூறியுள்ளது.

Tags : Russia ,Oxford Who ,first ,Billgates ,Rs , Russia, Oxford.,first ,release , vaccine
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...