×

கொரோனா தொற்று பாதிப்பால் போலீஸ் ஏட்டு உள்பட 3 பேர் பலி

ஆவடி: ஆவடியில் மத்திய பாதுகாப்பு படையில் போலீஸ் ஏட்டாக ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண்குமார் பாண்டே (47) என்பவர், பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 27ம்தேதி அருண்குமார் பாண்டேவுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அருண்குமார் பாண்டே தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் பாண்டே நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல, திருமுல்லைவாயல், வள்ளலார் நகர், 2வது தெருவில் 45 வயது வியாபாரி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 1ம் தேதி அவருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை வியாபாரி இறந்தார். மேலும், ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த 74 வயது மூதாட்டிக்கு ,கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா உறுதியானது. இதையடுத்து அவரை, உறவினர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவரும் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்களது உறவினர்கள் முன்னிலையில் ஆவடியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்தனர். பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தவேளையில், 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில்  கடந்து 2 மாதங்களில் 120க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால், மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால், பொதுமக்களிடையே கடும் அச்சம் ஏற்பட்டது.

இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில், பேரூராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதையொட்டி, முக்கிய சாலைகளில், பல்வேறு தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. பஸ் நிலையத்தில்  தற்காலிக கடைகள் வைக்கவும், கடைகள் காலை முதல் மதியம் வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பேரூராட்சியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனால், பேரூராட்சி அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags : Corona , Corona, police record, 3 killed
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...