துபாயில் இருந்து வந்த மீட்பு பயணியிடம் 20 லட்சம் மதிப்பு தங்கம், வாட்ச் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த சங்கர் (50) என்பவர், மீட்பு பயணியாக வந்தார். மருத்துவ பரிசோதனை முடிந்து அரசு இலவச தங்கும் விடுதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது உடமைகள் அன்றைய விமானத்தில் வராமல் நேற்று அதிகாலை வந்த மற்றொரு மீட்பு விமானத்தில் வந்தது. சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் அந்த உடமைகளை சோதனையிட்டனர். அதனுள் ஒரு பேட்டரி பொம்மை காரில் இ வடிவத்தில் தங்க பிளேட்கள் இருந்தன.

அதன் மொத்த எடை 388 கிராம். அதோடு விலை உயர்ந்த 4 கைக்கடிகாரங்களும் இருந்தன. தங்கம் மற்றும் கைக்கடிகாரங்களின் சர்வதேச மதிப்பு 20 லட்சம். இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சங்கர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>