×

தஞ்சை திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

தஞ்சை: டெல்டா மாவட்டங்களில், நாகை தொகுதி கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராசு, மயிலாடுதுறை திமுக எம்.பி. ராமலிங்கம், ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை தொடர்ந்து, தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக மாநகர செயலாளரான நீலமேகத்திற்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதையடுத்து, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : Corona ,Tanjore DMK MLA ,DMK ,Tanjore , Corona , Tanjore DMK MLA
× RELATED திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா