×

கொரோனா சிகிச்சை மையத்தில் இன்ஜினியர் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி

உத்தமபாளையம்: கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்த இன்ஜினியர், மனைவி, குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில்  தகட்டால் கழுத்தை அறுத்துக்கொண்டு, மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உத்தமபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 36 வயது சாப்ட்வேர் இன்ஜினியர், தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையில் திருமணம் செய்துள்ளார். கர்ப்பிணியான இவரது மனைவி, பிரசவத்திற்காக சொந்த ஊரான கோம்பைக்கு வந்தார். இங்கு, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரைப் பார்க்க வந்த கணவருக்கும் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக இன்ஜினியரை உத்தமபாளையம் தனியார் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்திலும், அவரது மனைவியை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. மனைவி, குழந்தையை பார்க்காமல் ஏக்கத்தில் இருந்த இன்ஜினியர் நேற்று அதிகாலை திடீரென தகட்டால் கழுத்தை அறுத்துக்கொண்டு, உடல் முழுவதும் கீறி சத்தம் போட்டுள்ளார். பின்னர், ‘என்னை எதற்காக முகாமில் வைத்திருக்கிறீர்கள். என்ன சிகிச்சை கொடுக்கிறீர்கள்’ என கத்தியபடி 2வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.  அந்த இடம் மண் தரை என்பதால் கால்கள் இரண்டும் உடைந்தன. பணியில் இருந்த டாக்டர்கள் அவரை மீட்டு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.


Tags : treatment center ,Engineer ,Corona ,suicide , Corona treatment center, engineer, suicide attempt
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...