×

இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை:  எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அதிகமான ஊரடங்கு தளர்வுகளை அளித்துவிட்டு இ-பாஸ் நடைமுறையை தொடர்வதால் பல்வேறு சிக்கல்கள் உருவாக்கியுள்ளன. மேலும், இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே சில நூறுகளை செலவு செய்து இ-பாஸ் பெற வேண்டிய நிலை உள்ளது. ஆகவே இது ஏழை-எளிய மக்கள் மீது மிகுந்த பாரத்தை ஏற்றும் நடவடிக்கை. ஆகவே இ-பாஸ் நடைமுறையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் பொதுமக்கள் படும் இன்னல்களை உணர்ந்து, அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.Tags : party ,STPI , E-pass system, STBI party
× RELATED நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய...