திருவள்ளுவர் திருநாள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் தமிழறிஞர்களையும், தமிழுக்கு தொண்டாற்றுகின்றவர்களையும் சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர் திருநாளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன் விவர குறிப்புகளுடன் நிழற்படம் இரண்டு, எழுதிய நூல்களின் பெயர் பட்டியலுடன் அந்நூல்களில் ஒருபடி வீதம் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு 30.9.20க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28190412, 044-28190413, மின்னஞ்சல் முகவரி: tamilvalarchithurai@gmail.com ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>