×

சிறப்பு விமானத்தில் 471 பேர் சென்னை திரும்பினர்

சென்னை: கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து டெல்லி வழியாக சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு 76 பேருடன் சென்னை வந்தது. அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், தனிமைப்படுத்த 3 பேர் அரசின் இலவச தங்குமிடத்துக்கும், 72 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டலுக்கும், ஒருவர் அரசின் சிறப்பு அனுமதி பெற்று வீட்டுக்கும் அனுப்பப்பட்டனர்.
* சார்ஜாவில் இருந்து 178 பேருடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்தது. தனிமைப்படுத்த 119 பேர் அரசின் இலவச தங்குமிடத்துக்கும், 58 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டலுக்கும், ஒருவர் அரசின் சிறப்பு அனுமதி பெற்று திருச்சிக்கும் அனுப்பப்பட்டனர்.
* துபாயில் இருந்து 180 பேருடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது.  தனிமைப்படுத்த 107 பேர், அரசின் இலவச தங்குமிடத்துக்கும் 72 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டலுக்கும், ஒருவர் அரசின் சிறப்பு அனுமதி பெற்று தஞ்சாவூருக்கும் அனுப்பப்பட்டனர்.
* இலங்கையில் இருந்து 37 பேருடன் சிறப்பு மீட்பு தனி விமானம் நேற்று காலை சென்னை வந்தது. அனைவரும் தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். அந்நிறுவனமே சிறப்பு அனுமதியுடன் அழைத்து வந்தது. அனைவரும் குடியுரிமை, சுங்க சோதனை முடிந்து தனிமைப்படுத்த சென்னை ஓட்டல்களுக்கு அனுப்பப்பட்டனர்

Tags : Chennai , Chennai, special flight
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...