×

ஜம்மு-காஷ்மீரின் 2-வது துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்பு

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் 2-வது துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா தற்போது பதவியேற்றுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு 3 மாதங்கள் கழித்து அக்டோபர் 31-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் முதல் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா மர்மு நியமனம் செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து 9 மாதங்களுக்கு மேலாக காஷ்மீர் துணை நிலை ஆளுநராக பணியாற்றி வந்த கிரிஷ் மர்மு தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருந்தார்.  இதுதொடர்பான கடிதத்தை ஜனாதிபதியிடம்  அவர் அளித்தார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரை ஜம்மு-காஷ்மீர் முதல் துணைநிலை ஆளுநர் பதிவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்து, புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமித்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா தற்போது பதவியேற்று கொண்டுள்ளார்.


Tags : Manoj Sinha ,Kashmir ,Deputy Governor ,Jammu , Manoj Sinha,2nd ,Deputy Governor ,Jammu ,Kashmir
× RELATED ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!:...