×

கீரனூர் அம்மா பூங்கா அருகே திறந்தே கிடக்கும் ஆழ்குழாய் கிணறு

கந்தர்வகோட்டை: கீரனூர் அருகே திறந்தே கிடக்கும் ஆழ்குழாய் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே புதிதாக போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு எந்தவித பாதுகாப்பின்றி திறந்த நிலையில் உள்ளது.

அசம்பாவிதம் ஏற்படும் முன் தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மணப்பாறை அருகே வீட்டின் பின்புறம் உள்ள ஆழ்க்குழாய் சரியாக மூடபடாத காரணத்தினால் சுஜித் என்ற சிறுவன் பரிதாபமாக இறந்து போனான். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திறந்த நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை மூடி தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது கீரனூர் அருகே அம்மா பூங்கா அருகில் புதிதாக ஆழ்குழாய் கிணறு போடப்பட்டுள்ளது. அதில் அமைக்கப்பட்டுள்ள பைப் திறந்த நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் தக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Keeranur Amma Park ,Keeranur Amma Park An , Keeranur ,Amma Park, , open bore well
× RELATED தஞ்சை ஸ்மார்ட் சிட்டிக்காக கொள்ளிடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி