×

கண்டமங்கலம் அருகே கொடுக்கூரில் பண்டையகால முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே கொடுக்கூரில் விளை நிலத்தில் பள்ளம் தோண்டியபோது பண்டைய கால முதுமக்கள் தாழி, மருந்து குடுவை, பானை ஓடுகள் கண்டுடெக்கப்பட்டன. இதனை விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே கொடுக்கூர் கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது விளை நிலத்தில் செங்கல் சூளைக்காக பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பண்டைய கால முதுமக்கள் தாழிகள், மருந்து குடுவைகள், எலும்புகள், பானை ஓடுகள், கீழடியில் கிடைக்க பெற்ற பெரிய செங்கற்கள் போன்றவை கிடைத்துள்ளன. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ரமேஷிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அவர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் கைப்பற்றினர். இத்தகவல் அறிந்த விழுப்புரம் எம்பி ரவிக்குமாரும் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக ரவிக்குமார் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்க பெற்ற மண் குடுவைகள் இரண்டாயிரம் ஆண்டுகள் அல்லது கிமு மூன்றாம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்க கூடும். கீழடியில் கிடைத்ததுபோல் பெரிய செங்கற்கள் இங்கு கிடைத்துள்ளது. இதனால் இப்பகுதியிலும் அகழாய்வு நடத்த வேண்டும். இதுகுறித்து தொல்லியல் துறை இயக்குனர் உதயச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் தொல்லியல் பொருட்கள் கிடைத்த இடத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்’ என்றார்.

Tags : Kodukkur ,Kandamangalam ,Kandamangalam Discovery , Kodukkur, Kandamangalam,ancient thali
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை