×

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்த கூடாது : தமிழக அரசு கடும் எதிர்ப்பு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்தும் திட்டத்திற்கு தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மானியங்களை தள்ளுபடி செய்யும் முறைகள் மாநில அரசிடமே விடப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்கு பல்வேறு பொருளாதார நிவாரண தொகுப்புகளை அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவை இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க உதவியாக இருக்கும் என நம்புகிறேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், மாவட்ட மருத்துவமனைகளிகல் தொற்று நோய்கள் பிரிவுகள் ஏற்படுத்துதல், வட்டார அளவில் பொது சுகாதார பரிசோதனை கூடங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்க முக்கிய அம்சங்களாகும்.
அதே நேரத்தில் மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெறும் வரம்பில் தேவையில்லாத கடுமையான நிபந்தனைகளை முன் வைத்திருப்பதை பிரதமரின் கவனத்திற்கு ெகாண்டு வருகிறேன். கொரோனா நோய் தொற்றை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மிகப்பெரிய வருவாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் கடன் வாங்கும் வரம்பை மாநில ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கும் மேலாக இருக்க வேண்டும் என்று மாநில அரசுகள் கோரின.

மாநில அரசுக்கு மிகப்பெரிய அளவிலான செலவுகள் உள்ளன. மாநில அரசுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வரி வருவாயை வைத்து திரும்ப செலுத்துவதற்கு ஏற்ற கடனை பெற வேண்டியுள்ளது. அவையெல்லாம் மத்திய அரசிடம் இருந்து வரும் மானியங்கள் அல்ல. எனவே கூடுதல் கடன் தேவைகளுக்காக தேவையில்லாத கட்டுப்பாடுகளை முன் வைப்பது காரணமில்லாததாகவே தெரிகிறது. மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து எழுவதற்கு முன்பு ஒரு சீரமைப்பு திட்டத்தை வலுக்கட்டாயமாக திணிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உகந்தது அல்ல. முன்மொழியப்பட்டுள்ள சீரமைப்பு திட்டங்களை மாநிலங்களிடம் விரிவாக கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் நிலைமையின் அடிப்படையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த சீர்திருத்தங்களை திட்டங்களை கொரோனாவுக்கான மத்திய சிறப்பு மானியத்துடன் இணைத்திருக்க வேண்டுமே தவிர, மாநில அரசுகள் பெரும் கூடுதல் கடனுடன் இணைக்க கூடாது. அரசியல் சாசனத்தின் 293 (3)ஆம் பிரிவுடன் மத்திய அரசின் அதிகாரத்தை இணைத்து கூடுதல் கடன் வாங்கும் மாநிலங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது இதுவரை நிகழ்ந்திராது ஒன்று.

தமிழகத்தை பொறுத்த வரை கூடுதல் கடன் பெற்று சீரமைப்பு செய்யப்பட வேண்டிய 4 பெரிய அம்சங்களில், எந்த நிதி உதவியையும் எதிர்பார்க்காமல் மாநில அரசே மேற்கொள்கிறது. மின்சாரம் பகிர்வுக்கான சீர்திருத்தங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. மின்சார சட்டத்தில் ெகாண்டு வர முன்மொழியப்பட்ட மாற்றங்களில் உள்ள பிரச்னைகள் பற்றி நான் ஏற்கனவே கருத்து கூறியிருக்கிறேன். விவசாயிகளுக்கு அளிக்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மானியங்களை தள்ளுபடி செய்யும் முறைகள், மாநில அரசுகளிடமே விடப்பட வேண்டும். என்பதுதான் எங்களின் நிலைப்பாடாகும். எனவே இந்த பிரச்சனையில் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில் சீர்திருத்த தேவைகளை நீக்கும்படி சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.

சீரமைப்பு திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மோசமான நிதி சிக்கல்கள் இருக்கும் சூழலில், கடன் பெறுவதற்காக தேவையில்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது. முக்கியமான செலவுகளில் தேவைப்படும் நிதியை மாநில அரசினால் பெற முடியாமல் போய் விடும். இந்த சூழ்நிலையில் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதை நம்புவதோடு, சம்பந்தப்பட்ட வழிகாட்டியில் தேவையான மாற்றங்களை கொண்டு வர அமைச்சகத்தை அறிவுறுத்தும்படி கேட்டுக்ெகாள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : government ,Tamil Nadu ,Government of Tamil Nadu , Free electricity , farmers,Government of Tamil Nadu ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...