×

வெள்ளக்காடாகும் மலைநாடு மற்றும் வடகர்நாடக பகுதிகள் 10 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை

பெங்களூரு:  கர்நாடக மாநில மலைநாடு, கடலோரம் மற்றும் வடகர்நாடக பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த பத்து நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வடகர்நாடகா, கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைநாடு பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் கடலோர பகுதியில் உள்ள மங்களூரு, உடுப்பி, கார்வார் மாவட்டங்களிலும் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கார்வார் மாவட்டத்தில் சூறை காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற கணபதி கோயிலை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. கோகர்ணா நகரில் பல மக்கள் குடியிருப்பு பகுதிகள், ேகாயில்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியில் வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

தென்கனரா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளது. தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோயில் தெப்பக்குளம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விவசாய பயிர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பலத்த சூறாவளி காற்றுடன் பெய்யும் மழைக்கு பெரியளவில் சேதம் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மழை தாக்கம் அதிகமிருப்பதால், ரெட் அலர்ட் கொடுத்துள்ளோம். பொது மக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது, மரம், கட்டிடங்களில் மழைக்கு ஒதுங்ககூடாது, கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்பது உள்பட பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. மாவட்டம் முழுவதும் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பெரும்பான்மையான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மலைநாடு பகுதியில் உள்ள ஹாசன், ஷிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை ஆர்ப்பரிக்க தொடங்கியுள்ளது. துங்கா, பத்ரா நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிக்கமகளூரு-மூடிகெேர நெடுஞ்சாலை, பாலேஹொன்னூர் நெடுஞ்சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹாசன் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஹேமாவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குடகு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் லட்சுமணத்தீர்த்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அதன் காரணமாக காவிரி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாகமண்டலா, சனிவாரசந்தை, நாபோக்லு, மடிக்கேரி தாலுகாக்களில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்திலும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வடகர்நாடக பகுதியில் உள்ள பெலகாவி, பாகல்கோட்டை, விஜயபுரா மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளதால், திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கிருஷ்ணா, பீமா, துங்கா, தூத்கங்கா நதிகளில் பெருக்கெடுத்துள்ளதால், நதியோர பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். பெலகாவி மாவட்டத்தில் உள்ள ேகாகாக் மற்றும் நிப்பாணி தாலுகாக்களில் கனமழைக்கு 7 பெரிய பாலங்கள் மூழ்கி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கதக் மாவட்டத்திலும் கனமழை பெய்துவருவதால் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பயிர் செய்துள்ள விளைச்சல்கள் நாசமாகியுள்ளது. மாவட்டத்தின் நரகுந்தா தாலுகாவில் 400 ஏக்கரில் விவசாயிகள் பயிர் செய்திருந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

ரெய்ச்சூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரெய்ச்சூர் தாலுகாவில் உள்ள கருணகுலு, குருவகுல, அக்ரஹாரா, குருவகாண உள்ளிட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள மக்களை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரகாஷ் நிக்கம் ஆகியோர் தோணியில் சென்று மீட்டனர். தார்வார் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் தார்வார்-சவதத்தி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், துமகூரு, ஷிவமொக்கா, கோலார், சிக்கபள்ளாபுரா, சாம்ராஜ்நகர், குடகு, ராம்நகரம், தென்கனரா மாவட்டங்களிலும் இரண்டு நாட்களாக ேலசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* ரெட் அலர்ட்
மாநிலத்தில் சிக்கமகளூரு, தென்கனரா, உடுப்பி, கார்வார், சிவமொக்கா, தார்வார், குடகு, கதக், மைசூரு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

* 50 கோடி ஒதுக்க உத்தரவு
மாநிலத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், நிவாரண பணிகள் மேற்கொள்ள உடனடியாக 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும்படி மாநில தலைமை செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கருக்கு முதல்வர் எடியூரப்பா மருத்துவமனையில் இருந்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்பு இருக்கும் பகுதியில் நிவாரண பணிகள் மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் தொலைபேசியில் பேசி நிவாரண பணிகள் ேமற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

Tags : districts ,parts ,hills ,regions , Flooded hills , northern regions,Red Alert alert
× RELATED அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் என்றால் என்ன?