×

மத்திய அரசின் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதில் முறைகேடு.: சேலம் அருகே கட்டுமானப் பணிகளை நிறுத்தி போராட்டம்

சேலம் : மத்திய அரசின் நகர்ப்புற திட்டத்தின் கீழ் தமிழக ஊரக வளர்ச்சி துறை கட்டித்தரும்  தனிநபர் கழிப்பிடம் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் தாச்நாயக்கன் பட்டி காமராஜர் காலனியில் வசிக்கும் மூன்று குடும்பங்களுக்கு கழிப்பிடம் கட்டித்தருவதற்காக தலா ரூ.12,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பனமரத்துப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் கட்டப்படும் இந்த பணிகள் தரமாக இல்லை என்பதே பயனாளிகளின் குற்றச்சாட்டு. இதனால் கட்டுமானப் பணிகளை அவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். குறைந்தபட்சம் கடைக்கால் கூட எடுக்காமல் கழிப்பிடம் கட்டுவதாக பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை அல்லாமல், அவர்கள் மேலும் ரூ.2000 லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : Government ,Salem ,Central ,construction work , Abuse ,construction ,personal,Central ,Government,Salem
× RELATED உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை...