கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது...: இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

ஜெருசலேம்: கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளதாக இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. ரஷ்யாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவடைந்துவிட்டன. அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருக்கிறோம் என ரஷ்ய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி அடுத்த மாதத்திற்குள் சந்தையில் இருக்கும் என்றும், அக்டோபர் மாதத்திற்குள் வெகுஜன தடுப்பூசிகள் தொடங்கும் என்று  ரஷ்யா அறிவித்திருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தடுப்பூசி செயல்பாட்டில் ரஷ்யா விரைந்து செல்வதை எச்சரித்துள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளதாக இஸ்ரேலங தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் தடுப்பூசி உருவாக்கும் திட்ட நிலவரத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டு அறிவதற்காக ராணுவ அமைச்சர் பென்னி காண்ட்ஸ், அங்கு தனது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஐஐபிஆர் என அழைக்கப்படுகிற இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நேற்று சென்றார்.

அதன் இயக்குனர் பேராசிரியர் ஷபிராவை அவர் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து பேராசிரியர் ஷபிரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது. குறிப்பிட்ட கால அட்டவணையின் அடிப்படையில் தடுப்பூசி கடந்து செல்ல வேண்டிய ஒழுங்குமுறை செயல்முறைகள் உள்ளன. இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் நாங்கள் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளை தொடங்குவோம், என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பேசிய ராணுவ அமைச்சர் பென்னி காண்ட்ஸ், இஸ்ரேலில் ஐ.ஐ.பி.ஆர். உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை, இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் தொடங்கும், என கூறியுள்ளார.

Related Stories:

>