×

நெசவாளர்களை ஆதரிக்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

சென்னை: தமிழக மக்கள் அனைவரும் தூய பட்டு, பருத்தி மற்றும் கைத்தறி உற்பத்தி ரகங்களை வாங்கி நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கேட்டுக் கொண்டுள்ளார். தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1,03,343 பேருக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தூய பட்டு, பருத்தி மற்றும் கைத்தறி உற்பத்தி ரகங்களை வாங்கி அணிந்து, நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


Tags : Weavers ,Chief Minister , Weaver, to be supported, CM request
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...