×

காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

சென்னை: சுதந்திர தின விழா ஒத்திகை 8, 10 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 6.30 மணிமுதல் ஒத்திகை முடியும் வரை இந்த மாற்றம் நடைமுறையில் இருக்கும்.
* போர் நினைவுச் சின்னத்திலிருந்து ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடி மரச்சாலை ஆகியவற்றில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
* காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் வாகனங்கள், வாலாஜாசாலை, அண்ணாசாலை. முத்துசாமிபாலம், ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.
* பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமிசாலை, அண்ணாசாலை, வாலாஜா சாலைவழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.
* அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமிசாலை, ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.
*முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

Tags : Kamaraj Road , Kamaraj Road, Traffic Change, Police Department
× RELATED மேம்பால பணி காரணமாக கோயம்பேட்டில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்