×

கொரோனா தடுப்பு பணிக்கு கூடுதல் பொறியாளர்கள்

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை மருத்துவ கட்டுமான பிரிவு மூலம் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அமைப்பது, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பைப் லைன், ஆக்சிஜன் சிலிண்டர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகிறது. இந்த மருத்துவ கட்டுமான பிரிவில் பொறியாளர்கள் பற்றாக்குயைால், கூடுதலாக பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு, அதன்கீழ் 5 உபகோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை சென்னை மண்டல மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளர் மேற்பார்வையில் செயல்படும் என அரசு செயலார் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டுமான பணிகளை மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : engineers , Corona, preventive work, additional engineers
× RELATED பிரசாரத்தில் அதிபர் டிரம்ப்...