×

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.  கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு திருப்பதியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது. திருப்பதி கோயில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட  170க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில், திருப்பதியில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் திருப்பதியில் சுமார் 7000 பேருக்கு குழந்தை தொற்று ஏற்பட்டதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மட்டுமே கடைகள் உணவகங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பதியில் முற்பகல் 11 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றிய சீனிவாசாச்சார்யா கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Tags : priest ,Tirupati Ezhumalayan ,temple priest , Tirupati, Ezhumalayan temple, priest, corona, death
× RELATED கோயில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலத்தில் பூசாரி உயிரிழப்பு