×

விலை ரூ.49... விலை ரூ. 35... கொரோனா சிகிச்சைக்கான பேவிபிராவிர் மருந்தை மலிவு விலையில் போட்டிப் போட்டு சந்தைப்படுத்தும் நிறுவனங்கள்!!

மும்பை : கொரோனா சிகிச்சைக்கான பேவிபிராவிர் மாத்திரையை 49 ரூபாய் விலையில் லூபின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஜப்பானில் இன்புளூவென்சாவுக்கு வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரைகள் தரப்படுகின்றன. இந்தியாவிலும் கொரோனா சிகிச்சைக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கு பேவிபிராவிர் மருந்தைப் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்கள் பேவிபிராவிர் மருந்தை போட்டிப் போட்டு கொண்டு சந்தைப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் லூபின் நிறுவனம் பேவிபிராவிர் மாத்திரையை கோவிஹால்ட் என்ற பெயரில் இந்தியாவில் வினியோகிக்க லூபின் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மாத்திரை ஒன்று ரூ.49 என்ற விலைக்கு சந்தையிடப்பட்டுள்ளது.இந்த மாத்திரை 200 மில்லிகிராம் அளவில் 10 மாத்திரைகள் கொண்ட அட்டையாக கிடைக்கிறது.  குறிப்பாக, இந்த மாத்திரைகள் லேசான பாதிப்பு முதல் மிதமான பாதிப்பு வரை உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிப்பதாக அந்த நிறுவனத்தார் கூறுகின்றனர்.

இதே போன்று நேற்று சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பேவிபிராவிர் மாத்திரையை புளூகார்ட் என்ற பெயரில் மாத்திரை ஒன்றுக்கு ரூ.35 என்ற விலையில் சந்தையிட்டுள்ளது.மேலும் பேவிபிராவிர் மாத்திரை ‘பேவிவென்ட்’ பிராண்ட் பெயரில், விலை 39 ரூபாய்க்கு விற்கப்படும் என்று  ஜென்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரின்டன் நிறுவனம் இதே மாத்திரையை ‘பேவின்டன்’ பிராண்ட் பெயரில் அதிகபட்சமாக 59 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவித்திருந்தது. கிளென்மார்க் நிறுவனம் ‘பேபிஃப்ளூ’ என்ற பிராண்ட் பெயரில் ஒரு மாத்திரையை 75 ரூபாய்க்கு விற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Companies ,Bevipravir ,Pavipravir , Corona, therapy, pavipravir, drug, companies
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!