×

இந்தியாவுக்காக தன்னலமின்றி சேவை செய்தவர் சுஷ்மா சுவராஜ்: முதலாமாண்டு நினைவு தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி: இந்தியாவுக்காக தன்னலமின்றி சேவை செய்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என அவரது முதலாண்டு நினைவு தினத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  ஹரியானாவில் பிப்ரவரி 14, 1962ம் ஆண்டு பிறந்த சுஷ்மா சுவராஜ் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு 1998ம் ஆண்டு முதல்வராக பதவியேற்றதன் மூலம் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார். 2014ம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அவர் சிறுநீரக பாதிப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி உயிரிழந்தார்.  அவரது முதலாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் முதலமாண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சுஷ்மா ஸ்வராஜின் முதலமாண்டு நினைவு தினத்தை நினைவு கூறுகிறேன். துரதிருஷ்டவசமாக நிகழ்ந்த அவரது திடீர் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிற்காக சுயநலமின்றி பெரும் சேவையாற்றியவர் அவர். உலக அரங்கில் இந்தியாவின் குரலாக எதிராலித்தவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆவார், எனக் கூறியுள்ளார். மேலும் அவர் மறைவையொட்டி நடந்த இரங்கல் கூட்டத்தின் வீடியோ பதிவையும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.



Tags : Sushma Swaraj ,anniversary ,Modi ,India , India, Sushma Swaraj, Memorial Day, Prime Minister Modi
× RELATED 133வது பிறந்த நாள் அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை