×

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற வாழ்த்து போஸ்டர்

ராமேஸ்வரம்: இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் விநாயகமூர்த்தி சகாதேவன் வெற்றி பெற வாழ்த்தி, ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாம்பன் மீனவர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தின் தேர்தலில் மொத்தம் 7,482 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதில் யாழ்ப்பாணம் பகுதிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தமிழரான விநாயகமூர்த்தி சகாதேவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்னையில் குறிப்பாக, தமிழக மீனவர்கள் பிரச்னையில் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இவர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்தி, ராமேஸ்வரம் பகுதியில் பாம்பன் மீனவர்கள் சார்பில் பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில், ‘இலங்கை - இந்தியா பாரம்பரிய மீனவர்கள் பிரச்னை தீர முயற்சி எடுத்து வந்த வேட்பாளர் விநாயகமூர்த்தி சகாதேவன் குரல், இலங்கை பாராளுமன்றத்தில் ஒலிக்க வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் அருள் பெயரில் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை பொதுமக்களும், மீனவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.



Tags : candidate ,victory ,elections ,Parliamentary ,Sri Lankan ,election , Sri Lanka Parliamentary Election, Candidate, Greeting Poster
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...