யுஎஸ் ஓபன் டென்னிஸ்: விலகினார் நடால்

மாட்ரிட்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று நடப்பு சாம்பியன் ரபேல் நடால் அறிவித்துள்ளார். கொரோனாவால் விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பிரெஞ்ச் ஓபன், யுஎஸ் ஓபன் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. யுஎஸ் ஓபன் இம்மாதம் 31ஆம் தேதி  தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க முன்னணி வீரர்கள் பலரும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். உலகின் முதல் நிலை வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) ஏற்கனவே விலகியுள்ள நிலையில், ஸ்பெயின் நட்சத்திர வீரர் நடாலும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து நடால் கூறுகையில், ‘கடந்த நான்கு மாதங்களாக எந்த போட்டியும் இல்லாத நிலையில், எஞ்சியுள்ள சீசனுக்கான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த  அட்டவணை மிரள வைக்கிறது. வேறு வழியில்லை என்பதும் புரிகிறது. இதில் உள்ள சில குளறுபடிகள் சரி செய்யப்படும் என்று நம்புகிறேன். கொரோனாவால், போட்டிகளில் பங்கேற்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. நியூயார்க்கில் தொடங்க உள்ள யு எஸ் ஓபன் போட்டியில் பங்கேற்பதை விரும்பினாலும், பயணம் செய்ய முடியாத  நிலைமை உள்ளது. அதனால் யுஎஸ் ஓபனில் பங்கேற்க முடியாது’ என்றார்.

Related Stories: