இங்கிலாந்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயர்லாந்து அணி மொத்தம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதியது. முதல் 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில், கடைசி போட்டிசவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 328 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் மோர்கன் 106 ரன் எடுத்தார். அடுத்து, களமிறங்கிய அயர்லாந்து அணியின் டெலனி 12 ரன்னில் அவுட்டனார். பால் ஸ்டர்லிங்யும், கேப்டன் ஆண்டி பல்பிர்னியும் அடுத்தடுத்து சதம் வீளாசி, அணியை வெற்றிப்பாதையை அழைத்துச் சென்றனர். ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்த சூப்பர் லீக் தகுதி சுற்று தொடரின் மூலம் இங்கிலாந்து அணிக்கு 20 புள்ளிகளும், அயர்லாந்து அணிக்கு 10 புள்ளிகளும் கிடைத்துள்ளன.

Related Stories: