×

அரும்பாக்கம் பகுதியில் ரூ.80 ஆயிரம் மதிப்பு போதைபொருள் பறிமுதல்

சென்னை: சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை, கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டதை தொடர்ந்து காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அரும்பாக்கம் போலீசார் நேற்று மாலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தனர்.

அப்போது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அரும்பாக்கம், அசோகா நகரில் உள்ள ஒரு பெட்டிக் கடையை சோதனை செய்தனர். அதில், அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கடையின் உரிமையாளர் விஜயக்குமார் என்பவரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர். மேலும், கடைக்கு பின்புறம் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.79,500 மதிப்புள்ள புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags : area ,Arumbakkam , Arumbakkam area, Rs. 80 thousand worth, drug seizure
× RELATED போதைப்பொருள் விவகாரம்.: தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்