×

அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சிறையில் அடைப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் (60). கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவர் மீது, 15 வயது சிறுமியை 2017ல் இருந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். உடனடியாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த 29ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். உடல் நிலை சீரானதால் நேற்று அவரை போலீசார் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

Tags : Nanjil Murugesan ,AIADMK , AIADMK, former MLA Nanjil Murugesan, jailed, imprisoned
× RELATED பெருந்துறையில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்