×

விவேகானந்தா பள்ளியில் போலீசாருக்கு யோகா பயிற்சி

மதுராந்தகம்: மதுராந்தகம் காவல் உட்கோட்டத்தில் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர், ஒரத்தி, சித்தாமூர், செய்யூர், சூனாம்பேடு, அணைக்கட்டு, உத்திரமேரூர், பெருநகர் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் போலீசாருக்கு ஆன்லைன் மூலமாக யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி, மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடத்தப்படுகிறது. இதில், ஒரு நாளைக்கு 30 பேர் வீதம் ஒரு மாதத்துக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம் யோகா பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. அதில், மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், எஸ்ஐ பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vivekananda School , Vivekananda School, for the police, yoga practice
× RELATED மனஅழுத்தம் போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி