×

கோபி அருகே விவசாய நிலத்தில் ஒரு கிலோ எடையுள்ள ராட்சத காளான்கள் உணவுக்கு உகந்ததா? என ஆய்வு

கோபி: கோபி அருகே விவசாய நிலத்தில் ஒரு கிலோ எடையுள்ள ராட்சத காளான்கள் முளைத்துள்ளன. இவை உணவுக்கு உகந்ததா? என அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த நம்பியூர் பொத்தபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ, விவசாயி. இவர் தோட்டத்தில் இயற்கை முறையில் வாழை, காய்கறி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் நிலக்கடலை பயிரிட்ட பகுதியில் இளங்கோ களப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு முளைத்து இருந்த ராட்சத காளான்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். ஒவ்வொரு காளானும் 1 கிலோவிற்கு மேல் எடை உள்ளதாக இருந்தது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபொழுது கடந்த சில நாட்களாக விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் இந்த காளான்கள் முளைத்து உள்ளன. வழக்கமாக 100 கிராம் அளவிற்கு தான் காளான் முளைக்கும். இந்நிலையில் தற்போது ஒரு கிலோ எடையுள்ள ராட்சத காளான்கள் முளைத்துள்ளது. ராட்சத காளான்களை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதுகுறித்து இளங்கோ கோபியில் உள்ள விவசாய மையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் ராட்சத காளான்கள் உணவுக்கு ஏற்றவையா என ஆய்வு செய்ய கோவைக்கு அனுப்பி உள்ளனர்.

Tags : farmland ,Kobe , Kobe, giant mushrooms, study
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்