×

கறம்பக்குடி பகுதிகளில் கால்நடைகளுக்கு வேகமாக பரவும் அம்மை நோய்: முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க கோரிக்கை

கறம்பக்குடி: கறம்பக்குடி பகுதியில் கால்நடைகளுக்கு வேகமாக அம்மை நோய் பரவுகிறது. எனவே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து நோயை கட்டப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. அனைத்து பகுதிகளும் விவசாய கிராமங்களாக உள்ளதால், ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர்.குறிப்பாக கறம்பக்குடி பகுதியை பொறுத்த வரை பிளாவிடுதி, அம்புக்கோவில், மைலன்கோன்பட்டி, மருதன்கோன்விடுதி, வான்டான்விடுதி, பந்துவக்கோட்டை, கேகே பட்டி, ரெகுநாதபுரம், பாப்பாபட்டி, கீராத்தூர், ராங்கியன்விடுதி, திருமணஞ்சேரி, கற்காகுறிச்சி, முள்ளங்குறிச்சி போன்ற கிராமங்களில் விவசாயிகள் அதிகமாக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். பசு மாடுகளை வளர்த்து பால் உற்பத்தியை பெருக்கி தங்கள் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கறம்பக்குடி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாடுகளுக்கும் அம்மை நோய் பரவி பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. மாடுகளின் தோல் பகுதியிலும், வயிற்று பகுதியிலும் அம்மை நோய் உருவாக்கி மாடுகளை பெரிதும் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன. இதான் காரணமாக பசு மாடுகளில் பால் முற்றிலும் குறைந்து கன்று குட்டிகளும் மாடும் எந்த உணவையும் எடுத்து கொள்ளாமல் அபாய நிலைக்கு சென்று விடுகின்றன.

அம்மை நோய் பாதித்த பசு மாடு மற்றும் கன்று குட்டிகளுக்கு கிராமத்தில் வசம்பு, வேப்பிலை, மஞ்சள் கலந்து அரைத்து அம்மை நோய் குணப்படுத்த மாடுகளுக்கு தடவி குணப்படுத்தி வருகின்றனர் எனவே அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கால்நடை மருத்துவர் மற்றும் பணியாளர்களை வைத்து கால்நடை மருத்துவ முகாம் அமைத்து அம்மை நோயிலிருந்து கால்நடைகளை காப்பாற்ற வேண்டும் என அரசுக்கு பொது மக்கள், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : areas ,Karambakudy ,camp ,camping , Karambakudy, Catastrophic ,cattle, Request, camping ,treatment
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை