×

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை பலத்த காற்றால் மரக்கிளைகள் முறிந்து விழுந்து கடும் பாதிப்பு: மின் தடையால் மக்கள் அவதி

கரூர்: வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று கரூர் மாவட்டம் முழுவதும் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை செய்யப்பட்டது.வங்க கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதலே பலத்த காற்று சூறாவளியை போல வீசத் தொடங்கியது. இந்த காற்றின் காரணமாக சாலைகளில் வாகனங்களில் செல்ல முடியாமல் அனைத்து தரப்பினர்களும் அவதிப்பட்டு விட்டனர். பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

இதற்கிடையே நேற்று மதியம் 1மணி முதல் 3 மணி வரை இரண்டு மணி நேரம் தாந்தோணிமலை பகுதியில் மின்தடை செய்யப்பட்டது. காற்றின் காரணமாக மின்கம்பிகள் பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இரண்டு மணி நேரத்தை தாண்டியும், அவ்வப்போது விட்டு விட்டும் மின்தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் நேற்று கடும் சிரமத்தை அனுபவித்து விட்டனர்.Tags : Depression ,Bay of Bengal, Strong ,severe ,branches
× RELATED நீட் தேர்வு மனஉளைச்சலால் தற்கொலை...