×

கோடியக்கரை கடற்கரையில் அதிநவீன ரோந்து கப்பலில் வீரர்கள் முகாம்

* தீவிரவாதிகள் ஊடுருவலா?
* காவல்படை போலீசார் ஆலோசனை

வேதாரண்யம்: கோடியக்கரை கடற்கரையில் அதிநவீன ரோந்து கப்பலில் வீரர்கள் முகாமிட்டுள்ளனர். தீவிரவாதிகள் ஊடுருவலா? என கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர ஆலோசனை நடத்தினர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை கடலோர காவல்படைக்கு சொந்தமான அதிநவீன ரோந்து கப்பல் ரோவர் கிராப்ட், இது கடலிலும் மற்றும் நிலத்திலும் செல்லக்கூடியது. இந்த கப்பல் ராமேஸ்வரத்திலிருந்து கோடியக்கரை வரை வழக்கமாக ரோந்து பணி மேற்கொள்ளும். இந்த கப்பல் கோடியக்கரை நிலப்பகுதிக்கு நேற்று மாலை வந்தது.கோடியக்கரை கடற்கரையில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. ரோந்து கப்பல் வந்ததை கேள்விபட்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்று வேடிக்கை பார்த்தனர். வழக்கமாக இக்கப்பல் கடலில் மட்டுமே ரோந்து பணி மேற்கொண்டு அவ்வப்போது வந்து செல்லும். தற்போது கோடியக்கரை கடற்கரையில் இக்கப்பல் முகாமிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வருவதாக தகவல் வந்து பிடிப்பதற்காக வந்து தங்கியுள்ளார்களா? எல்லை தாண்டி வரும் இலங்கை மீனவர்களை பிடிப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ளதா? இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்று உளவுத்துறை எச்சரித்து வந்து ரோந்து பணியை மேற்கொண்டுள்ளார்களா? அல்லது இலங்கையில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார்களா என்று  தெரியவில்லை.இதுகுறித்து கடலோர காவல்படை அதிகாரிகளிடம் கேட்ட போது, வழக்கமான ரோந்து பணி என்று தெரிவித்தனர். ரோவர் கிராப்ட்டில் ரோந்து பணிக்கு வந்த வீரர்களிடம் வேதாரண்யம் கடலோர காவல்படை டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் ஆகியோர் பாதுகாப்பு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். கோடியக்கரையில் ரோவர் கிராப்ட் கப்பல் முகாமிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Soldiers camp ,beach ,Kodiakkara ,Millionaire , Millionaire, beach, sophisticated, patrol, ship
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...