×

திருப்புவனம் கண்மாயில் பதினான்காம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பெரிய கண்மாய் பல ஆண்டுகளுக்கு பிறகு  குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. இக்கண்மாயில் இருந்து திருப்புவனம், நெல்முடிகரை, புதூர், கலியாந்தூர், அல்லிநகரம், வெள்ளக்கரை உள்ளிட்ட கிராம பாசனத்திற்காக 4 மடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நான்காவது மடையை சீரமைக்க இயந்திரம் மூலம் குழிகள் தோண்டியபோது 3 அடி நீளம், ஒரு அடி அகலம், ஒரு அடி உயரமும் கொண்ட கல்வெட்டு கிடைத்துள்ளது. அக்கால தமிழ் எழுத்துக்களுடன் கூடிய அந்த பட்டியக்கல்லின் ஒருபகுதி மட்டும் உள்ளது. கல்வெட்டில் ஆறு வரிகள் எழுதப்பட்டுள்ளது.

இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் மதுரை சாந்தலிங்கத்திடம் கேட்டபோது, ‘‘முதல்வரியில் ஆதிசுரத்தானுக்கு என்றும், இரண்டாவது வரியில் மழலி கூட்டத்து அரும்பு என்றும், மூன்றாவது வரியில் பட்டு முறிந்த இரங்கல் என்றும், நான்காவது வரியில் செல்லக் குடுத்த புழைய  என்றும், ஐந்தாம் வரியில் ஊருக்கு சமைந்த என்றும், ஆறாம் வரியில் இப்படிக்கு வயிரவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதி சுரத்தான் என்றால் சுல்தான்கள் என்று பொருள். சுல்தான் காலத்து படையெடுப்பில் அழிந்து போன கோயிலை கட்டுவதற்கு ஊர்க்காரர்கள் கூடி முடிவெடுக்கப்பட்டது. இப்படிக்கு வைரவன் என அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

Tags : Inscription Discovery , Fourteenth, century , turning , Inscription ,Discovery
× RELATED கால்வாய்க்கு பள்ளம் தோண்டியபோது...