சூறைக்காற்றுடன் பலத்த மழை 2,500 வாழைகள் ஒடிந்து நாசம்: தேவாரம் அருகே விவசாயிகள் சோகம்

தேவாரம்: தேவாரம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையினால் 2,500 வாழைமரங்கள் ஒடிந்து நாசமாகின.தேனி மாவட்டம், தேவாரம் அருகே பல்லவராயன்பட்டி, மேலசிந்தலைசேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்தது. மதியம் திடீரென சூறைக்காற்று வீசியது. இதில் சுமார் 2,500 வாழைகள் ஒடிந்து விழுந்து நாசமாயின.  இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயி சுந்தர் கூறுகையில், ‘‘கஷ்டப்பட்டு கடன் வாங்கி வாழை விவசாயம் செய்தேன். ஊரடங்கு காலத்தில் இவ்வளவு நன்றாக வளர்த்து அறுவடைக்கு பலன் கிடைக்கும் சமயத்தில் திடீரென 2,500 வாழைகள் சூறைக்காற்றுக்கு நாசமாகிவிட்டன. இதனால் கடனை எப்படி திருப்பி அடைப்பது என தெரியவில்லை. பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளேன்’’ என்று சோகத்துடன் தெரிவித்தார்.

Related Stories: