×

உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன.. ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியடைந்து : பிரதமர் மோடி பேச்சு

டெல்லி : உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன என்று பிரதமர் மோடி பெருமிதம் கொண்டார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.இதைத் தொடர்ந்து இந்த விழாவில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது.

*நாடு முழுவதும் இருந்து வருகை தந்துள்ள ஆன்மிக தலைவர்களுக்கு எனது வணக்கம். உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு எனது வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன்.

*ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொண்டதை எனது பாக்கியமாக கருதுகிறேன்.ஒரு கட்டத்தில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவோம் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார்கள்.

*நாடு முழுவதும் ராம மயமாக இருக்கிறது. இப்படி ஒரு நன்னாள் வந்ததை பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை.சரயு நதிக்கரையோரம் பொன்னான வரலாறு பொறிக்கப்பட்டு உள்ளது.வாழ்க்கையில் மிகவும் வியப்புக்கு உரிய விஷயங்கள் நிறைவேறி உள்ளன.

*உச்சநீதிமன்ற தீர்ப்பை  மதித்து அனைத்து தரப்பு மக்களும் அமைதி காத்தது பெருமைக்குரிய விஷயம்.நமது நீதித்துறையின் மாண்புக்கு சான்றாக ராமர் கோயில் விளங்குகிறது.

*உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன.அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது வரலாறு; இந்த வரலாற்றுக்கு சான்று அளிக்கும் வகையில் உலகமே பார்க்கிறது

*வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.இன்றைய தினம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது.

*ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது.ராமர் கோயில் கட்டுவது என்பது நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும் செயல். கோடான கோடி மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.

* நமது கலாசாரத்தின் சமகால அடையாளமாக ராமர் கோயில் விளங்கும்.நமது கலாச்சாரத்தின் சமகால அடையாளமாக ராமர் கோவில் இருக்கும், இந்த பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டது மன திருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அயோத்தியில் அமைக்கப்பட உள்ள ராமர் கோயில் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும்.

*ராமர் கோவிலுக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் களத்தில் இறங்கி போராடினர்.இந்தியர்களின் தியாகம், போராட்டம் காரணமாக ராமர் கோவில் எனும் கனவு நனவாகியுள்ளது .ராமர் கோவிலுக்காக போராடிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

*தியாகம், விடாமுயற்சியின் வெளிப்பாடாக ராமர் கோவில் அமைய உள்ளது.ராமர் கோவில் நமது கலாச்சாரத்தின் நவீன அடையாளமாக திகழும்.நம்பிக்கை, அன்பு மற்றும் அர்ப்பணிப்புகளை நமக்கு உணர்த்துவதாக ராமர் கோவில் இருக்கும்.வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ராமர் கோவிலும் உதாரணமாக திகழும்.

*ராமர் கோவில் அமைய உள்ள பிரதேசத்தின் பொருளாதாரம் மேம்படும்.அயோத்தி மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது.அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் தேசத்தை ஒருங்கிணைக்கும்.

*இறைவனுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பை ராமர் கோயில் ஏற்படுத்தும்.மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் ராமர் கோயில் அமையும்

*ராமர் கோயில் போராட்டத்தில் இருந்த உறுதி எவராலும் மறக்க முடியாது. ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

*தமிழில் கம்பராமாயணம் ராமரின் புகழை பறைசாற்றுகிறது. கம்போடியா, மலேசிய மொழிகளில் கூட ராமாயணம் உள்ளது. பல்வேறு நாடுகளிலும் ராமர் வழிபடப்பட்டு வருகிறார்.தாய்லாந்து, லாவோஸ் போன்ற நாடுகளிலும் ராமர் வழிபாடு உள்ளது.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இன்று மகிழ்ச்சியாக உள்ளனர்.ராம ராஜ்ஜியத்தில் வேறுபாடுகள் இல்லை, ஏழ்மை இல்லை.அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சியை உருவாக்குவோம், அது சுயசார்பு பாரதமாக அமையும்.

Tags : Modi ,speech ,world ,Ram , World, Ram Bhakti, Anthems, Failure, Prime Minister Modi, Speech
× RELATED எஸ்.பி.பி. மறைந்தாலும் கானக்குரல்...