ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகள் தலைமுறை தலைமுறையாக காத்திருந்தோம்.. நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது : உ.பி. முதல்வர் யோகி ஆத்யநாத்!!

டெல்லி : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்ததாக நம்பப்படும் ராமஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணி பூமி பூஜை சடங்குகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க செய்த பூஜைகளிலும் அவர் பங்கேடுத்தார். 40 கிலோ வெள்ளி செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் உ.பி. முதல்வர் யோகி ஆத்யநாத் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், ராமர் கோயில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது. ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகளாக காத்திருந்தோம். ராமர் கோயில் காட்டும் பணிகளை இனி ராமர் கோயில் அறக்கட்டளை முன்னெடுத்து செல்ல வேண்டும். இந்த தருணத்தில் எத்தனையோ பேர் தியாகம் செய்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை நாட்டு மக்கள் தற்போது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தருணத்திற்காக தலைமுறை தலைமுறையாக காத்திருந்தோம், என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்,ராமர் கோயில் பூமி பூஜை மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான முதல் படி, இந்த பூமி பூஜை வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது. ராமர் கோயிலுக்காக ஏராளமானவர்கள் செய்த தியாகத்தை நினைத்து பார்க்க வேண்டும்,என்றார். 

Related Stories:

>