×

ராம ராஜ்ய கொள்கைகளை அடிப்படையாக கொண்ட நவீன இந்தியாவின் அடையாளமாக ராமர் கோயில் திகழும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து!!

டெல்லி : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்ததாக நம்பப்படும் ராமஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணி பூமி பூஜை சடங்குகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க செய்த பூஜைகளிலும் அவர் பங்கேடுத்தார். 40 கிலோ வெள்ளி செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்து செய்தியில், நீதிக்கான செயல்முறையாக சமூக நல்லிணக்கத்துடன் ராமர் கோயில் கட்டப்படுகிறது. ராம ராஜ்ய கொள்கைகளை அடிப்படையாக கொண்ட நவீன இந்தியாவின் அடையாளமாக ராமர் கோயில் திகழும், என்று குறிப்பிட்டுள்ளார்.  

அதே போல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இந்துக்களின் நெடுநாள் கனவு நிறைவேறும் நாள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க பூமிபூஜை விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Ramnath Govind ,Ram Temple ,India , Rama Rajya Policy, Modern India, Ram Temple, President, Ramnath Govind, Greetings
× RELATED கேரளாவில் கோயில் திருவிழாவின்போது...