×

சசிகலா விவகாரத்தில் கெத்து காட்டிய ஐபிஎஸ் அதிகாரி ரூபா, கர்நாடகாவின் முதல் பெண் உள்துறை செயலாளராக நியமனம்!!

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா உட்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து எடியூரப்பா அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே ரயில்வே துறை ஐ.ஜியாக பணியாற்றி வந்த ரூபா ஐபிஎஸ், மாநில அரசின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கர்நாடகாவில் உள்துறை செயலாளராகப் பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை டி.ரூபா ஐபிஎஸ் பெற்றுள்ளார். கர்நாடகா மாநிலம் தாவனகரேவில் 2000ம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 43ம் இடத்தைப் பிடித்தவர் ரூபா.    

கடந்த 2017ம் ஆண்டு, சிறைத்துறை டிஐஜியாக ரூபா இருந்த போது, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவிற்கு சிறை விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் சிறையில் இருந்து சசிகலா வெளியே சுற்றித்திரிந்த காட்சிகள் குறித்து விடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.

இதற்கிடையே பெங்களூருவில் ரயில்வே துறை ஐ.ஜியாக பணியாற்றி வந்த ரூபா ஐபிஎஸ் தற்போது கர்நாடக மாநில அரசின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகக் கருதப்படுகிறது.மேலும் கர்நாடக மாநில அரசு 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு மாநகர காவல்துறையில் 5 துணை ஆணையாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.Tags : Rupa ,IPS ,Karnataka ,Home Secretary ,officer , Sasikala, IPS, Officer, Rupa, Karnataka, First Lady, Home, Secretary, Appointment
× RELATED உங்கள் இதயத்திலிருந்து வேலை செய்தால்,...