29 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி அயோத்தி பயணம் : அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்த மோடிக்கு வெள்ளி கிரீடம், சால்வை அணிவிப்பு!!

அயோத்தி: 29 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அயோத்திக்கு சென்றுள்ளார்.

*உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலை அமைப்பதற்கு கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

*இதனை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது.

*இதில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவுக்கு சாமியார்கள், விஐபி.க்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

*இதையடுத்து ராமர் கோயில் பூமி பூஜை விழாவிற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, லக்னோ வந்தடைந்தார். லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி அயோத்தி சென்றார். 29 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அயோத்திக்கு சென்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

*பிரதமர் நரேந்திர மோடி தங்க நிறத்தினாலான குர்தாவையும் வெள்ளை நிற வேஷ்டியையும் அணிந்துள்ளார்.

*அயோத்தி வந்தடைந்த பிரதமர் மோடியை உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்..

*பின்னர் அயோத்தியில் உள்ள அனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அனுமன் கோவிலில் பிரதமர் மோடிக்கு வெள்ளி கிரீடம், சால்வை அணிவிக்கப்பட்டது. அனுமன் கோயிலில் பிரதமர் மோடி 10 நிமிடம் சாமி தரிசனம் செய்து, அனுமனுக்கு தீப ஆராதனை நடத்தினார்.

*அயோத்தி ராமஜென்ம பூமி செல்லும் முன்பு அனுமன் கோயிலுக்கு செல்வது பாரம்பரியம் என்பது குறிப்பிடத்தக்கது.

*பின்னர் ராமஜென்ம பூமியில் குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்து தீப ஆராதனை காட்டியுள்ளார். மேலும் ராமஜென்ம பூமி வளாகத்தில் பாரிஜாத மரக்கன்றைமரக்கன்று நட்டு வைத்துள்ளார்.

Related Stories: