பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமுக்கு கொரோனா தொற்று உறுதி : சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை : பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதே போல் கொரோனா அரசியல் பிரமுகர்களையும் விட்டுவைக்கவில்லை. தமிழக ஆளுநர் புரோஹித்,

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான ஆகியோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.   இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், டெஸ்ட் எடுத்துள்ளார். அதில் அவருக்கு பாசிட்டீவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதை தொடர்ந்து அவர் சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, கடந்த இரு நாள்களாக உடல் நிலையில் ஒரு விதமான சோர்வு தெரிந்தது. காய்ச்சலும் சளியும் இருந்தது. இதை நான் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உடனடியாக மருந்துவமனைக்குச் சென்றேன். அங்கே, எனக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக சொன்னார்கள். மைல்ட் என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லியுள்ளனர்.

எனினும், நான் என்னை சூளைமேட்டிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்டுள்ளேன். சரியான தருணத்தில் மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். இன்னும் இரு தினங்களில் குணமடைந்து விடுவேன். எனக்குப் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. நான் நல்லபடியாக இருக்கிறேன். எனவே, யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் . நான் இங்கு ஓய்வு எடுக்கவே வந்துள்ளேன். என் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.தற்போது 74 வயதான எஸ்.பி பாலசுப்ரமணியம் மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

              

Related Stories:

>