×

செஞ்சி அருகே கொரோனாவால் இறந்த நபரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு!: நீண்ட நேரம் ஆம்புலன்சில் காத்திருக்கும் உடல்..!!

விழுப்புரம்: செஞ்சியில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் செஞ்சி அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன்சில் உடல் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எர்ணாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் 63 வயது முதியவர். இவர் கடந்த 25ம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அவர் உயிர் பிரிந்தது.

இந்நிலையில் அவரது உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் நள்ளிரவு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனை அறிந்துகொண்ட கிராம மக்கள், அக்கிரமத்திற்குள் வரும் வழிகளை பள்ளம் எடுத்து ஆம்புலன்ஸ் உள்ளே வர முடியாமல் இரவு முழுவதும் அப்பகுதியிலேயே காத்திருந்தனர். கல்லறை தோட்டம் கிராமத்தில் நடுவே அமைந்துள்ளது. அதனை சுற்றி கிராம மக்கள் இருப்பதால் ஊர் உள்ளே கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

 இதனால் செஞ்சி அரசு மருத்துவமனை அருகே சாலையோரம் நேற்று இரவு முதல் ஆம்புலன்ஸிலேயே சடலம் காத்திருக்கும் அவலம் நேர்ந்தது. செஞ்சியில் எந்த இடத்திலும் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து செஞ்சி அடுத்து கொட்டமங்கலம் பகுதியில் உள்ள தர்காவில் தற்போது இடம் ஒதுக்கியுள்ளார்கள். உடலை அடக்கம் செய்யும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையின்றி ஆம்புலன்ஸ் நிற்பதால் மருத்துவமனைக்கு செல்லும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Tags : corona ,Ginger , Villagers protest to bury body of corona dead near Ginger !: Body waiting in ambulance for a long time .. !!
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...