×

உலக ஸ்குவாஷ் இந்திய அணி விலகல்

சென்னை: மலேசியாவில் நடைபெறவுள்ள மகளிர் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய அணி விலகியுள்ளது. இது குறித்து, இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் (எஸ்ஆர்எப்ஐ) கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சைரஸ் பொஞ்சா கூறியதாவது: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற இருக்கும் (டிச. 15-20) மகளிர் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேறுவது என்று முடிவெடுத்துள்ளோம். கொரோனா அச்சுறுத்தலால் போட்டிக்குத் தயாராக போதிய நேரம், சூழல் இல்லாமல் இருப்பதாலும், தொற்றுநோய்க்கு இடையில் மலேசியாவுக்கு பயணம் செய்யும் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. அது மட்டுமல்ல தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பான பயணமும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதுகுறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்திடம் இருந்தும் வழிமுறைகள் எதுவும் பெறப்படவில்லை. எனவே இந்த சூழலில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதே சரியாக இருக்கும்.

Tags : World Squash Indian Team Disqualification , World Squash, Indian Team, Disqualification
× RELATED படிக்கல், டி வில்லியர்ஸ் அரைசதம் விளாசல் ஐதராபாத்தை வீழ்த்தியது ஆர்சிபி