×

முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: உயர்கல்விதுறை அறிவிப்பு

சென்னை: தமிழக உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
உயர்கல்வி துறையின் கீழ் செயல்பட்டுவரும் 51 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் வணிக துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்ப கல்விதுறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாம் ஆண்டு பட்டயபடிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு 20 ஜூலை ஆரம்பிக்க பட்டது. இதுவரை 16940 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாளாக  ஆகஸ்ட் 4ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதலாம் ஆண்டு டிப்ளோமா படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் பதிவு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை மேற்கொள்ளலாம்.


Tags : First Year, Diploma Admission, Apply Online, Extension of Time, Higher Education
× RELATED சிட்டி சிவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய நேரம் நீட்டிப்பு