×

ஐஐடியின் புதிய ஆன்லைன் கோர்ஸ்: உலக அளவிலான புது முயற்சி

சென்னை: ஐஐடி மெட்ராஸில் புது முயற்சியாக B.Sc in Data Science & Progaramming ஆன்லைன் கோர்ஸ் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மெட்ராஸ் ஐஐடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் தங்கள் வீட்டிலிருந்தபடியே கற்கும் நோக்கில் இப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டேட்டா சயிஸ்ன்ஸ் அன்ட் புரோகிராமிங் படிப்பை ஆன்லைனில் வழங்கும் உலகின் முதல் கல்விநிறுவனம் என்ற பெயரை ஐஐடி மெட்ராஸ் பெற்றுள்ளது. டேட்டா சயின்ஸ் துறையின் எதிர்கால தேவை மற்றும் வேலைவாய்ப்புகளை குறித்து முன்னனி தொழில்துறையினர் மற்றும் ஐஐடி பேராசிரியர்கள் நேற்று ஆன்லைன் மூலமாக கலந்து ஆலோசித்தனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆன்லைன் மூலமாக கலந்து கொண்டனர். மொத்தம் இரண்டு கட்டமாக ஆன்லைன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் குறித்து யூடியுப்பில் நேரலையாக விவாதிக்கப்பட்டது. இப்படிப்பிற்கான விண்ணப்ப படிவம் உட்பட பல முக்கிய அம்சங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Tags : IIT , IIT.New Online .Course.World .New initiative
× RELATED நீரியல் நிபுணர் இரா.க.சிவனப்பன் காலமானார்..!!