×

திருக்கழுக்குன்றம் பகுதிகளில் தொடரும் மின் வெட்டால் பொதுமக்கள் அவதி: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகிகின்றனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தினமும் இரவு, பகல் நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்தும் மின்விசிறி, மின்விளக்குகள் பழுதாகின்றன. மேலும், வீட்டு அத்தியாவசிய தேவையான மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவை பயன்படுத்த முடியவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு மோட்டார் பம்ப் செட் மூலம் நீர் பாய்ச்ச முடியாமலும் அவதியடைகின்றனர்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளிடம், பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும், கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கில் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள், இந்த தொடர் மின் வெட்டால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  குறிப்பாக, சில நேரங்களில் குறைந்த மின் அழுத்தம்  ஏற்படுவதால் வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் பழுதடைகிறது. எனவே, இந்த தொடர் மின்வெட்டை சரி செய்து, சீரான மின்சாரம் வழங்க  சம்பந் தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : suffering ,areas ,Thirukkalukkunram , Tirukkaḻukkuṉṟam pakuti, toṭarum miṉ veṭṭāl, potumakkaḷ avati,atikārikaḷ
× RELATED அரூர்- ஊத்தங்கரை சாலையில் குழாய்...