×

மனித கடத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு

காஞ்சிபுரம்: உலகம் முழுதும் ஜூலை 30ம் தேதி மனித கடத்தல் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது இதில் குழந்தைகள் கடத்தல், குழந்தைகளைபாலியல் தொல்லைகளில் இருந்து விடுபடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் காஞ்சிபுரம் செவிலிமேட்டி மனித கடத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி டிஎஸ்பி மணிமேகலை தலைமையில் நடந்தது. டிஎஸ்பி (பயிற்சி) வைஷ்ணவி கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதில் இருந்து எளிதில் விடுபடுவதை எடுத்துரைத்தார்.

இதேபோல் பெற்றோர்களும் குழந்தைகளிடம் தினமும் மனம் விட்டு பேசி, அவர்களது செயல்பாடு, குறைகளை கேட்டறிய அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் டிஎஸ்பி மணிமேகலை, குழந்தைகளுக்கான உதவி அழைப்பு எண்கள் குறித்த விளம்பர பதாகைகள், ஸ்டிக்கர்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விஷ்ணு காஞ்சி இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம், காஞ்சிபுரம் தாலுகா எஸ்ஐ ராஜமாணிக்கம், சைல்டுலைன் மற்றும் தனியார் தொண்டு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : Human trafficking, protest, daily awareness
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை